தெலுங்கு வருட பிறப்பிற்கு தயராகும் திருமலை
ADDED :3111 days ago
திருப்பதி: யுகாதி பண்டியை எனப்படும் தெலுங்கு வருட பிறப்பு நாளை(29ம் தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக திருமலை சீனிவாசப் பெருமாள் கோவில் சிறப்பாக சுத்தம் செய்யப்பட்டது.
திருமஞ்சன சேவை எனப்படும் இந்த சுத்தம் செய்யும் நிகழ்வு வருடத்திற்கு நான்கு முறை திருமலையில் நடைபெறும். பிரம்மோற்சவம்,வைகுண்டஏகாதேசி,ஆனி உற்சவம் மற்றும் யுகாதி பண்டிகை நாட்களில்தான் இந்த திருமஞ்சனம் நடைபெறும்.நிறைய தண்ணீரும் மஞ்சள்,சந்தனப்பொடி உள்ளீட்ட வாசனை திரவியங்களைக் கொண்டும் நடைபெற்ற இந்த திருமஞ்சன நிகழ்வில் கோவில் அதிகாரிகள் அவர் தம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.