மாரியம்மன் கோவிலில் 4ம் முறை பூச்சாட்டுதல்
ADDED :3149 days ago
ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நான்காம் முறை பூச்சாட்டு விழா நடந்தது. ஏத்தாப்பூர் வசிஷ்ட நதிக்கரையில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நான்காம் முறை பூச்சாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், காலை, 10:00 மணிக்குமேல், ஒன்றாவது வார்டில் இருந்து, உதிரிப்பூக்கள் எடுத்துக்கொண்டு, ஊர்வலம் வந்தனர். பின், மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.