பெருமாள் கோவிலில் ஏப்., 10ல் தேரோட்டம்
ராக்கிப்பட்டி: சேலம், ராக்கிப்பட்டி அருகே, செங்கோடம்பாளையம் சென்றாய பெருமாள் கோவிலில், பங்குனி திருவிழாவையொட்டி, வரும், 10ல், தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி, நாளை இரவு, 9:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. ஏப்., 7 இரவு, 9:00 மணிக்கு, கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா; 8 இரவு, 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா; 9 இரவு, 9:00 மணிக்கு, குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. ஏப்., 10 காலை, 6:00 மணிக்கு, சுவாமி தேருக்கு எழுந்தருளல், மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம், இரவு, 10:00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. 12 அதிகாலை, 3:00 மணிக்கு சத்தாபரண ஊர்வலம், 13ல், மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் திருவிழா முடிகிறது. இதற்காக, தேரை சுத்தம்செய்து, சாரம் கட்டி அலங்கரிக்கும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் செய்கின்றனர்.