உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை தேர்த்திருவிழா: கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு

உடுமலை தேர்த்திருவிழா: கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு

உடுமலை: உடுமலை, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கம்பம் நடப்பட்டதை தொடர்ந்து வழிபாட்டுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.  உடுமலை, மாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் வரும், 13ம் தேதி நடக்கிறது. கடந்த மாதம் 28ம்தேதி நோன்பு சாட்டப்பட்டு, நேற்றுமுன்தினம் கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு, 8:30 மணிக்கு பூஜை செய்யப்பட்டு, கோவிலில் கம்பம் நடப்பட்டது. நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் கோவிலில் அதிகரித்து வருகிறது.  பக்தர்கள் கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றி வழிபட துவங்கியுள்ளனர். இன்று, நள்ளிரவு, 12:00 மணிக்கு வாஸ்து சாந்தி மற்றும் கிராம சாந்தி பூஜைகள் நடக்கிறது. நாளை, மதியம், 12:30 மணிக்கு, கொடியேற்றப்படுகிறது. மதியம், 2:00 மணி முதல் பூவோடு எடுத்து செல்லும் வழிபாடும் ஆரம்பமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !