திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவில் தேரோட்டம்
பொன்னேரி: திருப்பாலைவனம்,திருப்பாலீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில், நேற்று நடந்த தேரோட்டத்தில், பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம்பிடித்து இழுத்து, உற்சவரை வழிபட்டனர். பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தில் லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.இங்கு, மார்ச், 31ல், பங்குனி பிரம்மோற்சவ விழா, விநாயகர்உற்சவத்துடன் துவங்கியது.தொடர்ந்து, கொடியேற்றம், சூரியபிரபை, சந்திரபிரபை, அதிகார நந்தி, ரிஷப வாகனம், நாக வாகனம், யானை வாகனம் உள்ளிட்டஉற்சவங்கள், தொடர்ந்து நடைபெற்றனஇந்நிலையில், திருப்பாலைவனம் கிராமத்தினர் சார்பில், நேற்று, தேரோட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பூக்கள் மற்றும் வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில், உற்சவ பெருமானுடன், காலை, 9:00 மணிக்கு நிலையில் இருந்து தேர் புறப்பட்டது. மாடவீதிகள் வழியாக திருத்தேர் உலா வந்து, உற்சவ பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பாலைவனம், பொன்னேரி, வேம்பேடு, மெதுார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, தேரின் வடம்பிடித்து இழுத்து, பெருமானை வழிபட்டு சென்றனர்.