தேவகோட்டை நகர சிவன் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு!
ADDED :5198 days ago
தேவகோட்டை:தேவகோட்டை நகர சிவன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக். 26ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.தெய்வானை, வள்ளி திருமணத்திற்குப்பின் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேதகராக சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முருகவேள் சதுக்கத்தில் கந்த சஷ்டி விழா கழக ஆண்டு விழா தலைவர் டால்பின் ராமநாதன் தலைமையில் நடந்தது.செயலர் சதாசிவம் வரவேற்றார். செயலர் மகாலிங்கம் அறிக்கை வாசித்தார். முன்னாள் நீதிபதி லட்சுமணன் துவக்கி வைத்தார். 8 நாட்கள் நடந்த விழாவில் தேவார இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றங்கள், கவியரங்கம், பரதநாட்டியம்,இசைநிகழ்ச்சி நடந்தன. விழாவில் ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன், கழக பொருளாளர் செந்தில்நாதன், பங்கேற்றனர்.