உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் பங்குனி உத்திர விழா

நாமக்கல் பங்குனி உத்திர விழா

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், பங்குனி உத்திர விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆயிக்கணக்கான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். நாமக்கல் - மோகனூர் சாலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், பங்குனி உத்திர விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 7:30 மணிக்கு, சங்கல்பம், 8:00 மணிக்கு கணபதி ஹோமம், 10:00 மணிக்கு, 108 சங்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு தீபாராதனை, மாலை, 5:30 மணிக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 6:30 மணிக்கு, பாலதண்டாயுதபாணி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, திருவீதி உலா வந்து
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !