உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் ஜெயந்தன் பூஜை

திருப்புத்தூர் ஜெயந்தன் பூஜை

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் யோகபைரவர் சன்னதி முன்பாக ஜெயந்தன் பூஜை கொண்டாடப்பட்டது. இந்திரன் மகன் ஜெயந்தன் மகாராஜா பெண் ஆசையால் சாபம் பெற்றார். கொன்றை வனத்தில் யோகபைரவர் முன் தவமிருந்து
விமோசனம் பெற்றார். இதனை நினைவுப்படுத்தும் வகையில்  சித்திரை முதல் வெள்ளிக்கிழமையான நேற்று திருத்தளிநாதர் கோயில் பைரவர் சன்னதியில் ஜெயந்தனுக்கு பூஜை நடந்தது. பெண்கள் மாவு விளக்கேற்றி பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து
பகல் 11:00 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் பாஸ்கர், ரமேஷ் குருக்கள் அஷ்டபைரவர் யாகம் நடத்தினர்.

பைரவருக்கு சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து  வெள்ளி அங்கியில் யோகபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெள்ளிக்குதிரை வாகனத்தில் பைரவர் வீதி உலா வந்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !