பிரதோஷத்தில் பச்சை லிங்க பூஜை
ADDED :3134 days ago
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் திருநோக்கிய அழகியநாதர் கோவில் உள்ளது. லட்சுமி தாயார் இத்தலத்தில் துளசியால் சிவனை வழிபட்டாள். அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசி அர்ச்சனை நடக்கிறது. தடையற்ற திருமணத்துக்கும், பிரிந்த தம்பதி சேரவும், பிரதோஷ காலங்களில் இரண்டு மரகத லிங்கங்களுக்கு பூஜை செய்யப்படுகிறது. பிரதோஷத்தன்று மட்டுமே இந்த பச்சை நிற லிங்கங்களை தரிசிக்க முடியும்.