உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் கும்பாபிஷேகம்: முகூர்த்த கால் நடும் விழா

மடப்புரம் கும்பாபிஷேகம்: முகூர்த்த கால் நடும் விழா

திருப்புவனம்: மடப்புரம் காளிகோயில் கும்பாபிஷேகம் வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறுவதை ஒட்டி நேற்று காலை முகூர்த்த கால் நடும்விழா கோயில் முன்புறம் நடந்தது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 16 ஆண்டு கடந்து விட்டபடியால் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தினர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் கடந்த சில வருடங்களாகவே திருப்பணிகள் நடந்து வந்தன. பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஜூன் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. நேற்று காலை கோயில் முன்புறம் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முகூர்த்த கால் நடப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் காட்டப்பட்டன. அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர், செயல் அலுவலர் இளையராஜா,மடப்புரம் நாட்டாண்மை சஞ்சீவி, மற்றும் மடப்புரம்,சோழவந்தான் உறவின்முறை பங்காளிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !