திருவண்ணாமலையில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி உலா
ADDED :3416 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள நந்தி பெருமானுக்கு பால் அபிஷேகம் உள்பட பல்வேறு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பிரதோஷத்தை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் கோவில் உள்பிரஹாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.