உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா

பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா ஏப்.25.,ல் பூசாரி அழைப்புடன் துவங்கியது.  கருப்பணசாமிக்கு பூஜை நடந்தது. ஆசிரியர் வேலுச்சாமி தலைமையில் சிலம்பாட்டக் குழுவினரின் விளையாட்டு, புலி ஆட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கை, மேளதாளத்துடன் அம்மன் கோயிலில் எழுந்தருளினார். பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். மாவிளக்கு, பொங்கல் படைத்து வழிபட்டனர். பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலையில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று குத்துவிளக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !