சாத்தையனார் கோயில் வடம் தூக்குதல் விழா
ADDED :3116 days ago
ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனுார் மகா சாத்தையனார் கோயில் சித்திரை விழா ஏப்.,22 ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் கோயிலில் மூலவருக்கு அபிஷேக ஆதாரனைகள் நடைபெற்றது. ஆறாம் நாளில் வடம் துாக்குதல் விழா நடந்தது. கோயில் இருந்த வடத்தை இளைஞர்கள் கூட்டாக துாக்கி ஊர்வலமாக சென்று ஊர் நடுவில் உள்ள கோயில் அரசமரத்தில் வைத்து வழிபாடு செய்தனர். எருதுகட்டு விழா இன்று(ஏப்.,29) நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சாத்தனுார் மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் செய்து வருகின்றனர்.