திருப்பரங்குன்றம் முருகன் மே 6ல் மதுரை புறப்பாடு
ADDED :3111 days ago
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடனும், தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து மே 6ல் மதுரைக்கு புறப்பாடாகின்றனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்று மே 10ல் மதுரை சுவாமிகளிடம், திருப்பரங்குன்றம் சுவாமிகள் விடைபெறும் நிகழ்ச்சி நடக்கும். மே 11 காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகி, தெற்காவணிமூல வீதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி, மாலையில் பூப்பல்லக்கில் புறப்பாடாகி, மதுரை கோயிலில் பவளக்கனிவாய் பெருமாளை அழைத்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கோயில் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் கோயில் வழக்கம் போல் திறக்கப்பட்டிருக்கும். மே 5முதல் மே 11வரை தங்க ரதம் புறப்பாடு இல்லை.