உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் ராமானுஜர் நூல் வெளியிட்டார் முதல்வர்

சென்னையில் ராமானுஜர் நூல் வெளியிட்டார் முதல்வர்

சென்னை: வைணவ ஆச்சாரியரான ராமானுஜரின் ஆயிரமாவது  அவதார விழா, ஸ்ரீபெரும்புதூர், ஆதிகேசவப் பெருமாள் பாஷ்யகார சுவாமி கோவிலில், ஏப்., 22 முதல், மே, 2 வரை நடந்தது. இதன் தொடர்ச்சியாக, ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை வண்ணப் படங்களுடன் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விளக்கும் வகையில், ராமானுஜர் வைணவ மாநிதி என்ற நூல் தயாரிக்கப்பட்டது. நூலை, முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். முதல் பிரதியை, அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெற்றார். இந்நூல், தமிழகத்தில்
உள்ள, 84 திவ்ய தேசங்களிலும் கிடைக்கும்; விலை, 600 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !