ராகவேந்திரர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி உற்சவம்
ADDED :3178 days ago
திருப்பூர்: திருப்பூர் ராகவேந்திரர் கோவிலில், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஜெயந்தி உற்சவம், நேற்று விமரிசையாக நடந்தது. பார்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராயகணபதி, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர், ஸ்ரீ குரு ராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனம் கோவிலில், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஜெயந்தி உற்சவம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, காலையில் கோ பூஜை மற்றும் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, சிறப்பு யாகம், ஸ்ரீ கணபதி, நவக்கிரகம், சுதர்சன ஹோமங்கள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், நுõற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.