ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கல்யாண வைபவம்
ADDED :3174 days ago
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம், ஏரிக்கரை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், சவுடேஸ்வரி தாயார் சமேத, ராமலிங்கேஸ்வர சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. சித்திரை பவுர்ணமி நாளை முன்னிட்டு, ஜலகண்டாபுரம், ஏரிக்கரை சவுடேஸ்வரி அம்மன் கேவிலில், நேற்று சவுடேஸ்வரி தாயார் சமேத ராமலிங்கேஸ்வர சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை, 7:30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி திருவீதி உலாவும், அன்னதானமும் நடந்தது. இதில், தேவாங்கர் குல மக்கள் திரளானோர், சுவாமி தரிசனம் செய்தனர்.