உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பலபட்டறை மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

பலபட்டறை மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

நாமக்கல்: பலபட்டறை மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது. நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற பலபட்டறை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தேர்விழா வெகு விமரிசையாக நடக்கும். இந்தாண்டு விழா நேற்று முன்தினம் துவங்கியது. சக்தி அழைத்தல், காப்பு கட்டு, கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு பூச்சாற்றுதல் நடந்தது. தொடர்ந்து, வரும், 21ல் மறுகாப்பு, 28ல் வடிசோறு, மாவிளக்கு நடக்கிறது. 29 அதிகாலை அம்மனுக்கு அபி?ஷகம், அலங்காரம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு மாவிளக்கு ஊர்வலம் நடக்கவுள்ளது. மே, 30 காலை மாவிளக்கு, பொங்கல் வைத்தல், வசந்தோற்சவமும், 31ல் மஞ்சள் நீர் உற்சவம், ஜூன்., 1ல் கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் சுதாகர், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !