ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
ADDED :5328 days ago
வேலூர்: வேலூர், கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், ஜலகண்டேஸ்வரருக்கு ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு, செல்லியம்மனுக்கு, காதம்பரி என அழைக்கப்படும் காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ரத்தினகிரி பால முருகன் ஸ்வாமி கோவிலில், பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம், வள்ளி மலை முருகன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் காட்பாடி முத்து மாரியம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.