உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் காக்க வைத்ததால் அமைச்சருடன் பக்தர்கள் வாக்குவாதம்

பழநி கோயிலில் காக்க வைத்ததால் அமைச்சருடன் பக்தர்கள் வாக்குவாதம்

பழநி: பழநி முருகன் கோயிலில் காக்க வைத்ததால், பக்தர்கள் அமைச்சருடன் வாக்குவாதம் செய்தனர்.பழநி பெரியநாயகியம்மன்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள், மலைக்கோயிலில் அன்னதானக்கூடத்தை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் ஆய்வுசெய்தார். பின் அவர் கூறுகையில்," பழநிகோயில் காலிப் பணியிடங்களை நிரப்பவும், புதிததாக
யானைவாங்கவும் முதலமைச்சரிடம் தெரிவித்துநடவடிக்கை  எடுக்கப்படும். பெரியநாயகியம்மன்கோயில் கும்பாபிஷேக பணிகள் 50சதவீதம் முடிந்துள்ளது. மலைக்கோயிலில் இரண்டாவது ரோப்கார் அமைக்கும்பணி, ஓரிரு மாதத்தில் துவங்க
உள்ளது,”என்றார். பழநிகோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், மண்டல இணை ஆணையர் பச்சையப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.

அமைச்சருடன் பக்தர்கள் வாக்குவாதம்: பழநி மலைக்கோயிலில் அன்னதான கூடத்தில் அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் ஆய்வு செய்தபோது, நீங்கள் வருவதாகக்கூறி 3 மணிநேரமாக எங்களை காத்திருக்க வைத்துள்ளனர். இதனால் குழந்தைகள், பெண்கள்  மிகவும் சிரமப்பட்டதாக பக்தர்கள் வாக்குவாதம் செய்தனர்.  பக்தர்களின் கேள்விக்கு திணறிய அமைச்சர் விசாரிப்பதாக ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !