மங்கலம்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா
ADDED :3100 days ago
மங்கலம்பேட்டை: தொட்டிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி விழாவில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மங்கலம்பேட்டை அடுத்த தொட்டிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 3ம் தேதி முதல் 18ம் தேதி வரை தினமும் காலை 7:00 மணிக்கு
அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் (19ம் தேதி) தீ மிதி திருவிழாவையொட்டி, காலை
7:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பகல் 11:00 மணிக்கு அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது. மாலை 5:00 மணிக்கு நடந்த தீ மிதி உற்சவத்தில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன்
செலுத்தினர்.