இரட்டை விநாயகர் கோவிலில் சிவவேள்வி சிறப்பு பூஜை
ADDED :3088 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் இரட்டை விநாயகர் கோவிலில் மாத சிவனிரவு பெருவிழா நடந்தது. கோவில் அறக்கட்டளை பொருளாளர் குமரகுரு தலைமை தாங்கி, விழாவை துவக்கி வைத்தார். அறக்கட்டளை தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவராஜ் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள் சிவவேள்வி சிறப்பு பூஜையை செய்தனர். தொடர்ந்து இரட்டை விநாயகருக்கு மகா தீபாராதனை நடந்தது.