பெட்டதம்மா கோவில் அபிஷேக விழா
ADDED :3094 days ago
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த சாரகப்பள்ளி கிராமத்தில் உள்ள பெட்டதம்மா கோவிலில் அபிஷேக விழா நடந்தது. தேன்கனிக்கோட்டை அடுத்த சாரகப்பள்ளி கிராமத்தில், பழமையான பெட்டதம்மா கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், சாரகப்பள்ளி மற்றும், 12 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சார்பில் அபிஷேக விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான அபிஷேக விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி, மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சுவாமிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பின் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது.