உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் உற்சவ திருவிழா

வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் உற்சவ திருவிழா

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மேலப்பாளையம் காளியம்மன் கோயில் வருடாந்திர உற்ஸவ விழா காப்புக்கட்டுடன் கோலாகலமாக தொடங்கியது.   காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.  விரதமிருந்த பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய பக்தர்களும், முளைப்பாரி எடுக்கும் பெண்களும் கோயிலில் சாமி தரிசனம் செய்து காப்புக்கட்டிக்கொண்டனர்.  இதனை தொடர்ந்து அம்மனுக்கு ஆபரண அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.   இரவு ஊர் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் ஊர்வலமாக பெரியஊரணிக்கு சென்று கரகம் எடுத்து வந்தனர்.   பெண்கள் பாதபூஜை செய்து அம்மனை வரவேற்றனர்.  பின்னர் கரகம் கோயில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.  தேவர் சமுதாய நாட்டாண்மைகள், விழாக்கமிட்டியினர் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !