கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தேரோட்டம்
ADDED :3111 days ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையிலும் , மாலையிலும் தேவி பவனி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒன்பதாவது நாள் விழாவான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. தேவசம்போர்டு இணை ஆணையர் பாரதி தேர் வடம் படித்து இழுத்து தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் தேர் இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் தேர் வந்த போது பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
10-ம் நாள் விழாவான இன்று தெப்பத்திருவிழாவும், அதை தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.