வேதாஸ்ரம குருகுலத்தில் சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா
ADDED :3073 days ago
புதுச்சேரி: வேதாஸ்ரம குருகுலத்தில் சாய்சங்கர பக்த சபா சார்பில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுலம் சாய் சங்கர பக்த சபா சார்பில், காஞ்சி சங்கராச்சியார் ஜெயந்தி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, மாலை 6:00 மணியளவில் கணபதி ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் வேத மந்திரங்கள் முழங்க காஞ்சி சங்கராச்சாரியாரின் பட ஊர்வலம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேதாஸ்ரம குருகுலத்தை சேர்ந்த அருணாச்சலம், சர்மா, சிவா, சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.