செக்கானுாரணி காமாட்சியம்மன் கோயில் வைகாசி திருவிழா
ADDED :3045 days ago
செக்கானுாரணி:செக்கானுாரணி காமாட்சியம்மன் கோயில் 2 நாள் வைகாசி திருவிழா நடந்தது. இதைமுன்னிட்டு ஒரு வாரம் முன்பிருந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். முதல் நாள் காலை ஏராளமான பக்தர்கள் பால்குடம், மஞ்சள் நீர் எடுத்து வந்து அம்மனை நீராட்டினர். சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் அம்மன், கருப்பசாமி சிலைகள், கரகத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கோயிலை அடைந்தவுடன் முளைப்பாரிகளை வைத்து பெண்கள் கும்மியடித்தனர். இரண்டாம் நாள் கரகம் எடுத்து பூஞ்சோலை சேர்த்தல் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விஸ்வகர்மா ஐந்தொழில் செய்வோர் சங்கத்தினர் செய்திருந்தனர்.