வலம்புரி விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம்
ADDED :3041 days ago
கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி வலம்பூரி விநாயகருக்கு, பகவதி அம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி பஞ்சாயத்து, மகிளிப்பட்டியில், தற்போது பகவதி அம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. இந்நிலையில், கட்டளை வாய்க்கால் பகுதியில் உள்ள வலம்பூரி விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் வழிபட்டனர். இதில், மகிளிப்பட்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.