உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1).. ஆடம்பர வசதி கூடும்

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1).. ஆடம்பர வசதி கூடும்

தன்னலம் கருதாமல் வாழும் தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மைகளை வழங்குவர். புதன் ஜூன் 28-க்கு பிறகு நற்பலன் கொடுப்பார்.  மனதில் பக்தி எண்ணம் மேம்படும். ஆன்மிகச் சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு. எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் சிறக்கும்.

கேது, சுக்கிரனால் ஆடம்பர வசதிகள் பெருகும். சூரியன், செவ்வாயால் வாழ்வில் சில தடைகள் குறுக்கிடலாம்.  வீண் அலைச்சல் ஏற்படலாம். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். குடும்பத்தில் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பொன், பொருள் சேரும். வீடு, வாகன வகையில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள்.  ஜூன் 28- வரை புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால்,  கணவன்-, மனைவி இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு நிலைமை சீராகும்.  புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். ஜூலை 8, 9- ல் பெண்களால் அனுகூலம் உண்டாகும். ஜூலை 3, 4-ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.  அதே நேரம் ஜூன் 20, 21- ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சற்று விலகி இருக்கவும். ஜூன் 15, 16, ஜூலை 12, 13, 14-ல்  புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். உடல்நலம் சுமாராக இருக்கும்.  சிலருக்கு மருத்துவ சிகிச்சை செய்ய நேரிடலாம். செவ்வாயால் பித்தம், மயக்கம், சளி பிரச்னை ஏற்படலாம். அலைச்சலால் உடல் அசதிக்கு ஆளாக வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் கூட்டாளி களிடையே ஒற்றுமை மேலோங்கும். தொழில் ரீதியான பயணம் சென்று ஆதாயத்துடன் திரும்புவீர்கள்.  தொழிலாளர் ஆதரவு சீராக கிடைக்கும்.  ஜூன் 28-க்கு பிறகு புதிய வியாபார முயற்சி வெற்றி தரும்.

கடந்த கால முயற்சியின் பலன் தற்போது கிடைக்கும்.  சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். ஜூலை 5,6,7.10,11-ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஜூன் 22, 23- ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

பணியாளர்கள் முயற்சித்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். ஜூன் 28-க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க யோகமுண்டு. கடந்த காலத்தில் இருந்த பணிச்சுமை குறையும்.

சிலருக்கு விரும்பிய இட, பணி மாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையுடன் செயல்படுவர்.  ஜூன் 30, ஜூலை 1, 2 ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். பணியிடத்தில் செல்வாக்கு கூடும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று வருமானம் காண்பர். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பெயருடன், பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

மாணவர்கள் புதன் சாதகமான இடத்தில் இல்லாததால் படிப்பில் விடாமுயற்சி தேவைப்படும். போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. ஜூன் 28-க்கு பிறகு  நல்ல மதிப்பெண் கிடைக்க பெறுவர். பெற்றோர், ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். விவசாயிகளுக்கு நெல், சோளம் போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்காது.  வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். நிலப்பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் சுமூகத்தீர்வு காண்பது நல்லது.

பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும்.  குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஜூன் 28- க்கு பிறகு திருமணம் போன்ற சுபவிஷயங்களில் நல்லமுடிவு கிடைக்கும். ஜூன் 24, 25- ல் சகோதர வழியில் உதவி கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்க பெறலாம். பிள்ளைகளின் வளர்ச்சிக்கு துணை நிற்பீர்கள். வேலை, தொழில் செய்யும் பெண்கள் சீரான வளர்ச்சி காண்பர்.

நல்ல நாள்:  ஜூன் 15,16,22,23,24,25,30
ஜூலை 1,2,3,4,8,9,12,13,14
கவன நாள்:  ஜூன் 26,27- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்:  7,9  நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்
* சனியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
* தினமும் காலையில் சூரிய தரிசனம்
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு விளக்கு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !