உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2).. பணப்புழக்கம் அதிகரிக்கும்

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2).. பணப்புழக்கம் அதிகரிக்கும்

மனநிறைவுடன் வாழ்வு நடத்தும் மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம்  குரு, சுக்கிரன்,  சனி, செவ்வாய், சூரியன் சாதகமாக இருந்து சிறப்பான பலன் தருவர்.  புதனால் ஜூன் 28- வரை நற்பலன் உண்டாகும். 9ம் இடத்தில் இருக்கும் குருவால்  மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் தாராள செலவில் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட உங்கள் மேன்மை அறிந்து சரணடையும் சூழ்நிலை உருவாகும்.  தடைபட்ட திருமணம் விமரிசையாக நடக்க வாய்ப்புண்டு.

குடும்ப வாழ்க்கை மேம்படும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, -ஆபரணம் வாங்கலாம். புதனால் புதிய முயற்சி வெற்றி பெறும். வீடு, -மனை, வாகன வகையில் நவீன மாற்றம் செய்வீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம்  வாங்க யோகம் உண்டாகும். ஜூன் 28-க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம்.

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஜூலை 10,11 ல் பெண்களால்  நன்மை கிடைக்கும்.  ஜூலை 5,6,7-ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் ஏற்படும். ஜூன் 20, 21-ல் அவர்கள் வகையில் பிரச்னை ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆரோக்கியம் மேம்படும். ஜூன் 22, 23, 30, ஜூலை 1,2-ல்  உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.  பகைவரால் ஏற்பட்ட இடையூறு மறையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்க வாய்ப்புண்டு. ஜூலை  8,9,12,13,14-ல் சந்திரனால்  சிறு தடைகள் வரலாம்.

ஜூன் 24, 25-ல் எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.  நண்பர்கள் மற்றும் சக  ஊழியர்கள் மிகவும் உதவிகரமாக செயல்படுவர். எதிர்பார்த்த சலுகை ஒவ்வொன்றாக கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். சிலருக்கு புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு. ஜூன் 28- க்கு பிறகு புதன் 7-ம் இடத்தில் இருப்பதால் வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை.  ஜூலை 3,4-ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.

கலைஞர்களுக்கு தொழிலில் குறுக்கிட்ட பிரச்னை அடியோடு விலகும். சக பெண் கலைஞர்கள்  உதவிகரமாக செயல்படுவர். புதிய ஒப்பந்தம் எளிதில் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கல்வியுடன் கலைத்துறையிலும் ஆர்வம் அதிகரிக்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற சற்று முயற்சி தேவைப்படும்.  நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும்.   

விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட  அதிக மகசூல் கிடைக்கும். விளைபொருளை அதிக விலைக்கு விற்று லாபம் காண்பர். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம்  கைகூடும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் கணவரின் அன்பையும், ஆதரவையும் பெறுவர். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு உங்களுக்கு பெருமை சேர்ப்பர்.  ஜூன் 26, 27- ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.  பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள்  கிடைக்கப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர்.

சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.  சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் பெறும். உறவினர்களுடன் சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு.

நல்ல நாள்: ஜூன் 17,18, 19, 24,25, 26, 27
ஜூலை 3, 4, 5, 6, 7, 10,11,15, 16
கவன நாள்: ஜூன் 28,29- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்:- 2,3,9  நிறம்:  சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்:
* சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை
* வெள்ளியன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு
* தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !