உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி).. பெண்களால் நன்மை

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி).. பெண்களால் நன்மை

பொறுமையின் இலக்கணமாகத் திகழும் மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் குரு, சுக்கிரன், ராகு நன்மை தர காத்திருக்கின்றனர். புதன் ஜூன் 28- வரை நன்மையை வாரி வழங்குவார். குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில்  இருப்பதால்  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். புதிய முயற்சியில் தடை வந்தாலும் அதை முறியடித்து விடுவீர்கள்.

சுக்கிரனால் விருந்து, விழா என  அடிக்கடி சென்று வருவீர்கள். பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். ஜூன் 17, 18, 19, ஜூலை 15,16- ல் பெண்களால் நன்மை உண்டாகும்.  
தம்பதியிடையே அன்பு நீடிக்கும். ஜூலை 10, 11 ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

ஆனால் ஜூன் 24, 25 -ல் அவர்களால் பிரச்னை ஏற்படலாம் சற்று ஒதுங்கி இருக்கவும். உடல் நலம் பாதிப்பு வரலாம்.

சிலருக்கு மருத்துவ சிகிச்சையும் தேவைப்படலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.தொழிலதிபர், வியாபாரிகளுக்கு அரசாங்க வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் மூலம் தொழிலை விரிவுபடுத்தலாம். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம்.  சற்று ஒதுங்கி இருக்கவும்.

ஜூன் 28-க்கு பிறகு பகைவரால் இடையூறு வரலாம். வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடலாம். ஜூன் 15, 16, 20, 21, ஜூலை 11, 13, 14-ல் தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.
ஜூன் 28, 29ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க யோகமுண்டு.பணியாளர்கள் மாத முற்பகுதியில் சிறப்பான முன்னேற்றம் காண்பர். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும்.  ஜூன் 28-க்கு பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு
பிரிந்து செல்ல நேரிடலாம்.  சிலர்  திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம். ஜூலை 8, 9-ல்  எதிர்பாராத நன்மை ஏற்பட வாய்ப்புண்டு. பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடி
கட்டி பறக்கும்.

கலைஞர்கள் நல்ல வளர்ச்சி பெறுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  சிலர் அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கப்  பெறுவர். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். தொண்டர் வகையில் திடீர் செலவு ஏற்படலாம். தலைமையின் சொல்லுக்கு கட்டுப்படுவது நன்மையளிக்கும்.  

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். கடந்த காலத்தில் இருந்த பின் தங்கிய நிலை இனி இருக்காது. ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். கலை, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். அதிகப்பணம் தேவைப்படும் பணப்பயிர்களைத் தவிர்ப்பது நல்லது. கால்நடை வளர்ப்பில்  மிதமான லாபம் கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம். நிலப் பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம்  சுமூகத்தீர்வு உண்டாகும்.

பெண்களுக்கு குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சிக்கு துணை நிற்பீர்கள். ஆன்மிக நிகழ்ச்சிகளில் விருப்பமுடன் பங்கேற்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகை விரைவில் வந்து சேரும். ஜூன் 30, ஜூலை 1, 2 ஆகிய தேதிகள் குதூகுலமான நாட்களாக அமையும். ஜூன் 22, 23-ல் புத்தாடை-, அணிகலன்கள் வாங்கலாம். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

நல்ல நாள்: ஜூன் 17, 18, 19, 22, 23, 28, 29, 30
ஜூலை 1, 8, 9, 10, 11, 15, 16
கவன நாள்: ஜூலை 2, 3- சந்திராஷ்டமம். -  
அதிர்ஷ்ட எண்: 1, 6  நிறம்: வெள்ளை, மஞ்சள்  

பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
* ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !