திருச்சிற்றம்பலத்தில் 108 பால்குட அபிேஷகம்
ADDED :3325 days ago
வானுார்: திருச்சிற்றம்பலத்தில், எல்லைகாளியம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடந்தது. வானுார் ஒன்றியம் திருச்சிற்றம்பலத்தில் உள்ள மகா எல்லைகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று காலை, திருச்சிற்றம்பலம் பஸ் நிறுத்தம் அருகில் வினாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.