ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 56.74 லட்சம் காணிக்கை
ADDED :3082 days ago
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூபாய் 56.74 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.
ராமேஸ்வரம் திருக்கோயிலில் 30 நாட்களுக்கு பிறகு சுவாமி, அம்மன் சன்னதி உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல் திறக்கப்பட்டு, கோயில் கல்யாண மண்டபத்தில் கணக்கிட்டனர். இதில் ரூபாய் 56 லட்சத்து 74 ஆயிரத்து 899 ரூபாய் ரொக்க பணமும், 107 கிராம் தங்கம், 7 கிலோ 607 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. இப்பணியில் கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், முதுநிலை கணக்காளர் பாண்டியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் பலர் பங்கேற்றனர்.