உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோவில் ஆடி கிருத்திகை திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

பாலமுருகன் கோவில் ஆடி கிருத்திகை திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

கிருஷ்ணகிரி: பர்கூர், பாலமுருகன் கோவில் ஆடி கிருத்திகை திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பர்கூர் பாலமுருகன் கோவில், 40வது ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா நேற்று காலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி பாலமுருகனுக்கு அபிஷேகம், கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல் ஆகியவை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு வெள்ளி வேல் ஊர்வலம், இரவு, 9:00 மணிக்கு சுபத்திரை கண்யாணம் நடந்தது. இன்று மாலை, 4:00 மணிக்கு வெள்ளி வேல் மஹா கணபதி ஊர்வலம் நடக்க உள்ளது. 14 மாலை, 4:00 மணிக்கு முருகன் வள்ளி தெய்வானை ஊர்வலம், இரவு வள்ளி திருமணம் மற்றும் முருகன் திருவிளையாடல் நாடகம் நடக்க உள்ளது. 15 அதிகாலை, 3:30 மணிக்கு, ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி பாலமுருகனுக்கு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. இதையடுத்து, கொண்டப்ப நாயனப்பள்ளியை சேர்ந்த பக்தர் சுந்தரேசன், தன் மார்பின் மீது குந்தாணி வைத்து மஞ்சளை உலக்கையால் இடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர், முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறந்து சென்று, சுவாமிக்கு மாலை அணிவித்து வேண்டுதல் நிறைவேற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !