உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் 2,308 காவடிகள் ஊர்வலம்

திருவண்ணாமலையில் 2,308 காவடிகள் ஊர்வலம்

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு,
2,308 காவடி ஏந்தி, பக்தர்கள் மாட வீதியை வலம் வந்து, வழிபட்டனர்.  திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி தந்த, கம்பத்து இளையனார் சன்னதியில் உள்ள  முருகப்பெருமானுக்கு, ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் காவடி விழா எடுப்பது வழக்கம்.

அதன்படி, நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு, கம்பத்து இளையனார் சன்னதி அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி என, பல்வேறு வகையான, 2,308 காவடிகளை ஏந்தி மாடவீதியில் உலா வந்தனர். காவடியில் எடுத்து வந்த பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால், அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !