சீர்மல்கும் ஆய்ப்பாடி
ADDED :2967 days ago
கண்ணன் வளர்ந்த ஊர் என்பதால் ஆயர்பாடிக்குப் பெருமை உண்டானது. ஆயர்பாடியின் செல்வவளத்தை, சீர்மல்கும் ஆய்ப்பாடி என்று ஆண்டாள் திருப்பாவையில் போற்றுகிறாள். அங்கே ஆயர்கள் பாலைக் கறக்க குடத்தை எடுத்ததும், கணப்பொழுதில் பசுக்கள் பாலை நிறைத்தன. அதனால் வள்ளல் பெரும்பசுக்கள் என்று அவள் போற்றுகிறாள். பரம்பொருளாகிய நாராயணனே, கிருஷ்ணனாக தங்கள் இலம் நாடி வந்த சந்÷ தாஷ களிப்பை ஆயர்கள் கொண்டாடினர். கண்ணன் பால், தயிர், வெண்ணெயைத் திருட வருவான் என்று நினைத்து முற்றத்தில் கட்டியிருக்கும் உறியை தாங்களே உருட்டி கீழே கொட்டியும், பால், தயிர், நெய்யை வீடெங்கும் சிந்தியும் நின்றனர் என்று பெரியாழ்வார் ஆயர்பாடி பாசுரங்களில் குறிப்பிடுகிறார்.