உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூய விண்ணரசி அன்னை ஆலய தேர்த்திருவிழா

தூய விண்ணரசி அன்னை ஆலய தேர்த்திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் தூய விண்ணரசி அன்னை ஆலய தேர்த்திருவிழா, கடந்த, 13ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அன்றிலிருந்து நேற்று முன்தினம் வரை தினமும் சிறப்பு திருப்பலி நடந்து வந்தது. நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. பின் மாலை, 6:00 மணிக்கு வேண்டுதல் திருப்பலியும், 8:00 மணிக்கு தூய விண்ணரசி அன்னையின் தேர் மந்தரிப்பு நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி மறை மாவட்ட முதன்மை குரு தேவசகாயம் தலைமையில் நடந்தது. பின், மூன்று தேர்களில் விண்ணரசி உருவ சிலையுடன், கானா தியான மையத்திலிருந்து, தூய விண்ணரசி அன்னை ஆயலம் வரை தேர்பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நேற்று காலை, 6:15 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !