மயிலாடுதுறையில் கோயில் யானைக்கு 2 கிலோ கொலுசு அணிவித்து பக்தர்கள் வழிபாடு
ADDED :3003 days ago
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தேவாரப் பாடல் பெற்ற அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. பார்வதி தேவி மயில் உறுகொண்டு சிவபெருமா னை பூஜித்த தலமான இந்தகோயிலில் 50 வயதுடைய அபயாம்பிகை என்ற பெயருடைய பெண் யானை உள்ளது.
வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் யானை அபயா ம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மேலநாஞ்சில்நாட்டை சேர்ந்த மனோகர் என்பவர் யானையின் 2 முன்னங்கால்களுக்கும் தலா ஒரு கிலோ எடையில் மொத்தம் 2 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட கொலுசுகளை அணிவித்து வழிபாடு நடத்தினார். அதனை தொடர்ந்து பக்தர்கள் யானைக்கு பழங்கள், உணவுகளை வழங்கி வழிபட்டனர். அப் போது யானை கொலுசு அணிவிக்கப்பட்ட காலை அசைத்து நடனமாடி காட்டியது பக்தர்களை பரவசப்படுத்தியது.