ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவக்கம்
ADDED :3003 days ago
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் செட்டிபட்டி, அன்பு மாடல் நகரில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதற்கான பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, மகா சங்கல்பம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தன. ஞாயிறன்று காலை 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை பந்தல்குடி ஸ்ரீ சாய்ராம் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.