கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா; அமைச்சர் பங்கேற்பு
கரூர்: கரூர் கோவிலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், அமைச்சர் பங்கேற்றார். விட்டுகட்டி மகா கணபதி கோவிலில், யாக வேள்வி, சிறப்பு பூஜைகள் நடந்தன. கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள அண்ணா நகரில், பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இதில், விநாயகர் சதர்த்தியை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், யாகம் நடந்தது. மதியம் நடந்த, சிறப்பு பூஜையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று, மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். கரூர் வர்த்தக சங்க தலைவர் ராஜூ உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்., விட்டுகட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே, அரச மரத்தின் அடியில் மகா கணபதி விநாயகர் கோவில் உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோவில் முன் நேற்று கலை யாக வேள்வி நடத்தப்பட்டது. சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. கணபதிக்கு பால், தயிர், பன்னீர் பலரசம் ஆகியவற்றைக் கொண்டு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சுவாமிக்கு மலர் அங்காரம் செய்து, பூஜை நடந்தது. இதில் லாலாப்பேட்டை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.