ராஜ அலங்காரத்தில் ராஜகணபதி அருள்பாலிப்பு
ADDED :3296 days ago
சேலம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, ராஜ அலங்காரத்தில் சேலம் ராஜகணபதி, நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், தேரடி வீதியில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. கடந்த, 23ல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. தினமும் சிறப்பு அலங்கார ஆராதனை நடந்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணிக்கு அதிகாலை பூஜை நடந்தது. பின்னர், 108 லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. பிறகு, 108 லிட்டர் கரும்பு சாறு கொண்டு அபி?ஷகம் செய்யப்பட்டது. மாலை, 6:45 மணிக்கு ராஜகணபதி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர், குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.