உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத பிரதோஷ பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தங்க கொடி மரம் அருகில் உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள நந்தி பகவான், ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு, தேன், பால், தயிர் உட்பட, 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது, பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், இரண்டாம் பிரகாரத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !