உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்ரீத் உற்சாக கொண்டாட்டம்

பக்ரீத் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: ஈகை திருநாளான, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகைகளில், திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பக்ரீத், நாடு முழுவதும் நேற்று, சிறப்பாக கொண்டாடப் பட்டது. சென்னை, திருவல்லிக்கேணி, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகள் மட்டுமின்றி பொது இடங்களிலும்,பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. அதில் சிறுவர், பெரியவர் என, ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை செய்தனர். பின், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி, பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !