உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனுக்கும் ஆறுமுகம்!

சிவனுக்கும் ஆறுமுகம்!

முருகனுக்கு மட்டுமல்ல, சிவபெருமானுக்கும் ஆறுமுகங்கள் உண்டு. ஒரு பெட்டிக்கு ஐந்து பக்கங்கள் வெளியே தெரியும். கீழேயும் ஒரு பக்கம் இருப்பதுபோல சிவபெருமானுக்கும் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும், மேலும், கீழும் என இரண்டு முகங்களும் உண்டு. கீழுள்ள முகத்தை அதோ முகம் என்பர். ஐந்து முகத்தோடு அதோ முகமும் தந்து... என்கிறது கந்தர் கலிவெண்பா, சிவனின் ஆறு முகங்களே ஆறுமுகப்பெருமானுக்குரிய முகங்கள் ஆயின. குற்றாலத்தில் அனந்தல், ராமேஸ்வரத்தில் காலைச் சந்தி, திருவானைக்காவலில் உச்சிக்காலம், திருவாரூரில் பிரதோஷம், மதுரையில் இரவு, சிதம்பரத்தில் அர்த்தஜாமம் என ஆறு கால பூஜையில் ஈசனை தரிசனம் செய்வது விசேஷம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !