கரூர் செல்வவிநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்!
கரூர்: கரூர் கோவை ரோடு பார தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செ ல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம், வரும் 4ம் தேதி நட ப்பதையொட்டி, விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகின்றன. கரூர் கோவை ரோடு பாரதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், வரும் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள், தனுர் லக்னத்தில், மஹா பூர்ணாஹூதி கடன் புறப்பாடுடன் நடக்கிறது. முன்னதாக, 2ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள், ஸ்ரீமஹாகணபதி ஹோமம், ஸ்ரீநவக்கிரஹ ஹோமம், ஸ்ரீமஹாசுதர்ஸன ஹோமம், ஸ்ரீமஹாலக்ஷ்மி ஹோமம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து காவிரி தீர்த்தம் எடுத்துவர புறப்பாடு நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு மேல் இ ரவு 9.30 மணிக்குள், விநாயகர் வழிபாடு, யஜமான மஹாசங்கல் பம் , புண்யாகம், அனுக்ஞை, வா ஸ்துசாந்தி, மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பனம், ரக்ஷ்பந்தனம், கும்பலங்காரம், முதல்காலயாகசாலை பூஜை தீபாராதனை, பிரசாதம் வழங்கும் வைபவம் நடக்கிறது. அடுத்தநாள் 3ம் தேதி, காலை 8,30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள், இரண்டாம் கால யாகவேள்வியும், மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள், பரிவார ஸ்வாமிகள் பிரதிஷ்டை கோபுர கலசம் வைத்தலும், கண் திறப்பை தொடர்ந்து மூன்றாம் கால யாகவேள்வியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள் மூர்த்தி ஹோமங்கள், மூலமந்திர ஹோமங்களும், இரவு 9 மணிமுதல் 10.30 மணிக்கு, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடக்கிறது. "மஹா கும்பாபிஷேக சர்வசாதகர் கரூர் சிவஸ்ரீ.முரளி சிவாச்சாரியார் சர்வசாதகராக இருந்து நடத்துகிறார். ஸ்தபதியார் கனகரத்தினம், சிற்பி தனசேகர், பொறியாளர் ஆனந்த் திருக்கோயிலை வடிவமைத்துள்ளனர். 3ம் தேதி இரவு 7 மணிக்கு, சிவஸ்ரீ சின்னப்பன் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார். மஹா கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அன்னதானம் நடக்கவிருக்கிறது. கோவில் திருப்பணிகளை தலைவர் செல்லமுத்து, உதவி தலைவர் தன்ராஜ், பொருளாளர் நித்தியானந்தம், இணைச்செயலாளர் புஷ்பராஜ், திருப்பணி கமிட்டி பொருளாளர் சோளியப்பன், கமிட்டி உறுப்பினர்கள் ராஜாமணி, முருகவேல் மற்றும் உறுப்பினர்கள் செய்துவருகின்றனர்.