அழகன்குளம் நடராஜர் கோயிலில் கும்பாபிஷேக விழா
தேவிபட்டினம், தேவிபட்டினம் அருகே அழகன்குளம் செங்குந்த முதலியார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக காலை 6:30 மணிக்கு கஜ பூஜை மற்றும் நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் ராஜகோபுரம் மற்றும் புனருத்தாரண, பரிவார ஆலய கோபுரங்களிலும் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து கோபுர கும்ப கலசத்திற்கு தீப ஆராதனையும், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றன. விழாவில் அர்ச்சகர் கிருஷ்ணசாமி, இந்து சமூக சபை நிர்வாகிகள், திருப்பணிக்குழு தலைவர் சந்திரன் ஜெயராணி, செயலாளர் பாலசுப்பிரமணியன், செங்குந்த முதலியார் சமூக தலைவர் ராமசந்திரன், பொருளாளர் முருகேசன், அழகன்குளம் பாஸ்கரன், உமாபாரதி, விஜய பிரகாஷ், முத்துகிருஷ்ணன், முத்துப்பாண்டி, பாலகுரு திருஞானம், தர்மலிங்கம், முரளி, சிவக்குமார் முதலியார், போஸ் செட்டியார், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன மாநில தலைவர் ராஜசேகர், ரவிச்சந்திரன், ராஜசேகரன் முத்துமாரி, கோதண்டபாணி, ராதாகிருஷ்ணன், முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் குணசேகரன், வள்ளி பாலன் குடும்பத்தினர் உட்பட செங்குந்தர் சமூக நிர்வாக குழுவினர் மற்றும் திருப்பணிக் குழுவினர், இளைஞர் மன்றத்தினர் திரளாக கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை அழகன்குளம் செங்குந்த முதலியார் சமூகத்தினர் செய்திருந்தனர்.