உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

ஆத்தூர்: ஆத்தூர் விநாயகர் கோவில்களில், மஹா சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. ஆத்தூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெள்ளை விநாயகர் கோவிலில், மஹா சங்கடஹர சதுர்த்தி விழா, நேற்று முன்தினம் நடந்தது. அதில், வெள்ளை விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பூக்கள், பழங்கள் கொண்டு பூஜை செய்து, தீபாராதனை நடந்தது. அதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். அதேபோல், ஆத்தூர், ராணிப்பேட்டை விநாயகர், கடைவீதி விநாயகர், விநாயகபுரம் சித்தி விநாயகர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், நரசிங்கபுரம் ஆகிய கோவில்களில் பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !