25 அடி உயர கருடாழ்வார்
ADDED :3005 days ago
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். 30 மீட்டர் நீளத்தில் இவருக்கு வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக் கிழமையில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக வீற்றிருக்கின்றனர்.