5ல் ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் லட்ச தீப விழா!
ADDED :5160 days ago
திருவள்ளூர் : குளிர்ந்தநாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில், வரும் 5ம் தேதி, லட்ச தீப விழா நடைபெற உள்ளது. திருமழிசை, ஸ்ரீகுளிர்ந்தநாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் மூன்றாவது சோம வாரத்தில், லட்ச தீப விழா நடைபெறுவது வழக்கம். இம்முறை, 13ம் ஆண்டு லட்ச தீப பெருவிழா வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, 4ம் தேதி காலை, கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு, 108 சங்கு ஸ்தாபனமும் நடைபெறும்.