உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

விழுப்புரம்: சிறுவந்தாடு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், வரும் 23ந் தேதி, புரட்டாசி முதல் வார சனிக்கிழமை உற்சவம் நடக்கிறது. விழுப்புரம் அடுத்த சிறுவந்தாட்டில், கனகவல்லி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, புரட்டாசி முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு திருமஞ்சனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும் 22ம் தேதி மாலை 3:00 மணிக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.  மாலை 6:00 மணிக்கு புதுச்சேரி வில்லியனுார் துரைராஜன் நாதபிரம்மம் இசைக் குழுவினரின், வயலின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து, 23ம் தேதி சனிக்கிழமை காலை 5:00 மணிக்கு, சுப்ரபாதம், 7:00 மணிக்கு, மூலவர் சிறப்பு தரிசனம் நடக்கிறது. அதனை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, கருட வாகனத்தில் பெருமாள் திருவீதியுலா நடக்கிறது. விழாவில் திருமண தடைகளை நீக்கும், மட்டை தேங்காய் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் சிறுவந்தாடு, மோட்சகுளம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !